வியாழன், 24 செப்டம்பர், 2009

நாம் என்ன செய்ய முடியும். நாம் என்ன செய்ய இயலும்.

மேலே உள்ள இரண்டு வரிகள் தான் இன்று ஞாலத்தில் உள்ள தமிழர் சிலரை பற்றி நிற்கும் சொற்றொடர்கள்.ஆம் இந்த இரண்டு சொற்றொடர்களுக்கும் பொருள் ஒன்று தானே என்று நீவிர் வினவினால் அதற்கு மறுமொழியானது தமிழ் மொழியின் படி 'ஆம்' என்று தான் இருக்கும் .ஆனால் தமிழரிடையே நிலவும் தருத்துகளின் அடிப்படையில் இவ்விரு வரிகளையும் ஆராய்ந்தால் இவற்றின் பொருள் வெவ்வேறு என்பது புலப்படும்.இதில் நாம் என்ன செய்ய இயலும் என்பது தமிழீழத்தில் ௨௦௦௯ இல் [2009] நடந்த தமிழின அழிப்பிற்குப் பின் புலம் பெயர் ஈழத் தமிழரிடையே எழுந்த சிந்தனையாகும்.இப்படி சிந்தித்து அவர்கள் விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டனர்.புலிகள் ஓங்கி இருந்த நேரத்தில் தாம் அரசியல் போராட்ட களத்தில் இறங்காதே இன்றைய அவல நிலைக்கு காரணம் என்பதை உணர்ந்து, பன்னாட்டு அரசியல் களத்தில் இறங்கி போராடுகின்றனர்.அவர்களின் செயல்பாடுகளை நோக்கும் போது எதிர்காலத்தில் விடுதலைப் போராட்டமானது இரு வழிகளில் ஒரே நேரத்தில் ஒரே இலக்கை நோக்கி பயணிக்கும் என்று அறிய முடிகிறது .



ஆனால் நாம் என்ன செய்ய முடியும் என்பது ஈழச் சிக்கல் பற்றி தமிழக தமிழர் கூறும் நொண்டிச் சாக்காகவோ அல்லது எழுப்பும் வினாவாகவோ இருக்கிறது .இந்த சிக்கலைப் பொருத்தமட்டும் தமிழகத்தில் பலவகை மக்கள் உண்டு.அவர்களுள் தெலுங்கர்களாக இருந்துக் கொண்டு தன்னை தமிழர் என்று அடையாளப்படுத்திக்கொண்டு நயவஞ்சகமாக தமிழரை தவறாக வழி நடத்துபவரும் ,திக்கு திருப்புபவரும் ,இந்துத்துவ இசுலாமிய கிறித்துவ மதவெறியரும் ,சாதி வெறியரும் ,மதங்களையும் சாதிகளையும் கூறி தமிழரை தம் வணிக மற்றும் அரசியல் நோக்கத்திற்காக பிளவு படுத்துபவரும் தமிழ் ஈழம் சிக்கலையும் இன்னலையும் பற்றி செப்பும் சொற்றோடரகவே 'நாம் என்ன செய்ய முடியும்' என்பது இருக்கிறது .இந்த வகையரையில் பெரிய இயக்க தலைவர்கள் முதல் சராசரி மனிதர்கள் வரை உள்ளனர் .இந்த வகையரையில் உள்ள சராசரி மனிதர்கள் தாம் தமிழின எதிர்ப்பு கொள்கைகளை தான் பின்பற்றுகிறோம் என்பதை உணராமல் இருக்கின்றனர் .ஆனால் இவர்கள் இந்த தமிழின எதிர்ப்பு கொள்கைகளை தாமாகவே வழிந்து ஏற்பதில்லை .இவர்கள் இவர்களின் தலைவர்கள் மற்றும் இவர்கள் சார்ந்த இயக்கங்களின் தவறான வழிகாட்டல்களால் இந்நிலைப்பாட்டை எடுக்கின்றனர் .இவர்களை திருத்துவது எளிதான செயல் இல்லை .ஆனால் முயன்றால் இவர்களை திருத்த இயலும் .ஆனால் இன்னொரு கும்பலொன்று உண்டு. அந்த கும்பலுக்கு உலகில் எவன் மடிந்தாலும் கவலையில்லை.அவர்களின் குடும்பத்தினர் இப்படி கொல்லப்பட்டாலோ கற்பழிக்கப்பட்டலோ கூட அவர்கள் வருந்துவரா என்று தெரியவில்லை . இந்த கும்பல் பற்றிய நல்ல செய்தி என்னவெனில் இக்கும்பல் தமிழ் உணர்வாளர்களுடன் மல்லுக்கு நிற்பத்தில்லை .தமிழர் நலனை தமிழின எதிர்ப்பு கும்பலளவிற்கு கெடுப்பதில்லை . இது போன்ற மக்கள் மட்டும் அல்லாது உண்மையாகவே ஈழத் தமிழருக்காக தாம் என்ன செய்ய முடியும் என்று தெரியாது இக்கேள்வியை கேட்கும் சில இளைஞர்களும் இளம்பெண்களும் இருக்கின்றனர் . இவர்களை வழிநடத்துவதும் இவர்களுக்கு சிந்தனைத் தெளிவை ஏற்படுத்துவதும்



இவர்கள் போலி நாட்டு இயத்தால் [தேசியத்தால்] பீடிக்கப்பட்டு இருப்பின் அதன் பிடியிலிருந்து இவர்களை வெளிக்கொனர்வதும் தமிழின உணர்வாளர்கள் செய்யவேண்டிய தலையாயக் கடைமையாகும்.முதலில் இவர்களுக்கு ஈழம் பற்றிய வரலாற்றையும் தமிழரின் போராட்ட வரலாற்றையும் தமிழ் ஈழத்தின் தேவைக்கான காரணத்தையும் ,தன்முடிவு உரிமையை பற்றியும் [Right to Self-Determination] கற்பிக்கவேண்டும் .ஏனெனின் ,ஏன் போராடுகிறோம் என்று தெரியாமல் போராடுபவனால் சரிவர போராடவோ போராட்டத்தில் உறுதியுடன் இருக்கவோ வெல்லவோ இயலாது .மேலும் இவர்கள் தம்மை ஒத்த தமிழர்களிடமோ வேற்றுவர்களிடமோ தமிழ் ஈழம் பற்றிய உரையாடலில் ஈடுபடும் போது "நீ தமிழன் என்பதால் தான் அந்த விடுதலைப்புலிகள் என்ற கொடூரர்களுக்குக்காக பரிந்து பேசுகிறாய்' என்ற ஒற்றை சொற்றொடரில் இவர்களை மற்றவர்கள் தோற்கடித்துவிடுவர். இவர்களுக்கு இவற்றை எல்லாம் கற்பிக்காவிட்டால் இந்த தமிழீழச் சிக்கலில் முழு ஈடுபாடு இருக்காது.



இவர்களை முதில் தமிழரின் வரலாற்றையும் இந்தச் சிக்கல் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் தமிழரின் போராட்ட வரலாறு பற்றியும் கற்பிக்கவேண்டும் .தமிழர்கள் முப்பது ஆண்டுகள் அறவழியில் போராடி பலன் கிட்டததாலும் ,௧௯௫௬[1956] ,௧௯௮௧[1981] ஆகிய ஆண்டுகளில் தமிழருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் மற்றும் யாழ்ப்பாண நூலக எரிப்பு போன்ற நிகழ்வுகளாலும் தான் அவர்கள் வேறு வழியின்றி போர் கருவிகளை கையில் எடுத்தனர் என்ற உண்மையை எடுத்துரைக்கவேண்டும்.மேலும் ௧௯௮௩ [1983] இல் தமிழருக்கு எதிராக நிகழ்த்த வன்கொடுமைகள் காரணமாக கொழும்பில் மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டதாலும்,பல தமிழச்சியர் கற்பழிக்கப்ட்டமையாலும் ,அவர்களின் உடமைகுளும் இல்களும் சுரையாடி அழிக்கப்பட்டமையாலும் அதன் காரணமாக இலட்சக்கணக்கான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியெரியமையாலும் இவற்றையெல்லாம் சிங்கள போக்கிலிகளும் காவல் துறையினரும் சிங்கள் அரசிடம் இருந்து தமிழரையும் அவரது இல்லங்களையும் கடைகளையும் கண்டறிவதற்காக சிங்கள அரசிடம் இருந்து பெற்ற கொழும்பு நகர வாக்காளர் பட்டியலை கொண்டு செய்தமையாலும் எல்லாவற்றிக்கும் மேலாக இதை பார்த்து உலகநாடுகள் மௌனமாக இருந்தமையாலும் தமிழர் போர்கருவிகளை தவிர வேறு எதையும் நம்ப இயலாத சூழலுக்கு தள்ளப்பட்டனர் என்பதை எடுத்துரைக்க வேண்டும்



மேலும் புலிகளுக்கு துவக்கத்தில் இந்தியா தன்னல நோக்கத்துடன் உதவியதையும் புலிகள் தம் கைப்பாவையாக செயல்படமாட்டார் என்றுணர்ந்தபின் அவர்களிடம் இருந்து போர் கருவிகளை அமைதி படை ஊடாக பெற்றுக்கொண்டு இருந்த அதே வேளையில் மற்ற போராட்டகுழுக்களை தம் கைப்பாவையாக முயற்சித்ததை எடுத்துகூரவேண்டும்.அமைதி படை காலத்தில் திலீபன் இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி பல நாட்கள் நீர்கூட அருந்தாமல் அறவிழியில் உண்ணாநோன்பு இருந்து உயிர் நீத்த கதையை மிக தெளிவாக எடுத்து கூற வேண்டும் .



மலையக தமிழரின் வாழ்வுரிமையை காக்காதது முதல் அண்மையில் போர் என்ற பெயரில் இன அழிப்பு முடிந்த பின் கூடிய, ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அவையில், இலங்கை மீது போர் குற்ற மற்றும் மனித உரிமைகள் மீறலுக்கான ஆய்வை ஐநா நடத்தக் கூடாது என்று இந்தியா வாக்களித்தது வரை இந்தியாவின் தமிழின எதிர்ப்பு கொள்கைகளை இளைஞர்களுக்கு எடுத்துகூறி அவர்களை அறவழியில் ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட செய்யவேண்டும் .இதன் ஊடாகவே தமிழக தமிழர் ஈழத் தமிழருக்கும் தமக்கும் உதவ இயலும் .


-