வியாழன், 14 ஜனவரி, 2010

சித்திரை க[1] தமிழ் புத்தாண்டா?

பொங்கலை தமிழ் புத்தாண்டாக அரசு அறிவித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.தமிழ் நாட்டு கருணா செய்த ஒரே நல்ல செயல் இது தான்.

சித்திரை க [1 ] வைணவ புத்தாண்டு ஆகும்.
ஒரு நாள் நாரதன் தனக்கு மனைவியே இல்லை என்று வருத்தமாக பெருமாளிடம் கூறினானாம்.அதற்கு பெருமாள் பெண் உருவம் பூண்டு நாரதனுடன் 600 ஆண்டுகள் புணர்ந்து,60 குட்டிகளை போட்டானாம்.அந்த அறுபது குட்டிகளுக்கும் 60 வடமொழி பெயர்கள்

அந்த வடமொழி பெயர்களை ஆரிய பார்ப்பனர்கள் ஆண்டுகளுக்கு வைத்து அவற்றை தமிழ் ஆண்டுகள் என்கிறனர்.அந்த ஆண்டுகளை வரலாற்றை பதிவு செய்ய பயன்படுத்த முடியாது.ஏன் என்றால் 60 ஆண்டுகள் கழித்து முன்பு வந்த ஆண்டே மீண்டும் வரும்.ஆகையால் எந்தனையாவது பார்த்திப ஆண்டிலோ ,விரோதி ஆண்டிலோ ஒரு நிகழ் நிகழ்ந்தது என்று பழைய ஆவணங்களை பார்த்து கூற இயலாது. மேலும் பண்டைய தமிழர்கள் சைவம்,வைணவம் ,சமணம்,பௌத்தம் என்று பல சமயங்களை பின்பற்றினர்.ஆகையால் அந்த காலத்தில் மற்ற சமயத்தினர் எப்படி இந்த வைணவ புத்தாண்டை கொண்டாடி இருப்பர்?


தமிழ் அறிஞசர்கள் சங்க இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து ௫௦௦ [௫00] தமிழ் அறிஞசர்காள் சுறவம் [தை] க [1] தான் தமிழ் புத்தாண்டு என்ற உண்மையை வெளிகொண்டுவந்தனர்.ஆகையால் பொங்கலை தமிழ் புத்தாண்டாக தமிழ் நாட்டு அரசு அறிவித்து திருவள்ளுவரின் திருக்குறள் பொது அவைக்கு வந்த நாளை அடிப்படையாக கொண்ட தொடர் ஆண்டுகளை உடைய ஒரு நாள் காட்டியை தமிழ் நாட்டு அரசு ஏற்று இருக்கிறது.பொங்கலை தமிழ் புத்தாண்டாக அறிவித்து இருக்கிறது.இப்போது நாம் தமிழ் ஆண்டு ௨0௪௧ [2041] இல் இருக்கிறோம்.இப்போது அரசு ஆண்டு கணக்கை மாற்றி அமைத்தும் உண்மையான தமிழ் புத்தாண்டான பொங்கலை, தமிழ் புத்தாண்டாக மீட்டெடுத்தும் உள்ளது.ஆனாலும் இன்னும் சித்திரை,வைகாசி,புரட்டாசி போன்ற திங்கள்கள்[ மாதங்கள்] வடமொழியில் தான் இருக்கின்றன.அரசு இதை தடை செய்து விட்டு உண்மையான தமிழ் திங்கள்களான சுறவம் ..போன்றவற்றை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்
உழுந்தும் உழவே தலை

என்றோ சொல்லி வைத்தான் எங்கள் வள்ளுவன் உலகம் உருண்டை என்று! வாழ்க நின் புகழ்!

புதன், 13 ஜனவரி, 2010

இந்தியாவிற்கும் இந்துவிற்கும் எதிரான ஏறுதழுவுதலை தடை செய்!!!







பாப்பாத்தி அம்மா செயலலித்தா காலத்தில் திடீர் என்று சில திடீர் விலங்கு நல ஆர்வலர்கள் வழக்குமன்றத்திற்கு போய் தமிழரின் மறவிளையாட்டும் மரபுவிளையாட்டுமான ஏறுதழுவுதலை ,அதாவது அவர்கள் மொழியில் சல்லிக்கட்டை, இல்லை இல்லை 'ja'ல்லிக்கட்டை தடை செய்யவேண்டும் என்று வழக்குதொடுத்தனர்.




ஏறுதழுவுதல் என்பது ரு000[5000] ஆண்டுகளா சிந்து சீர்வெளி நாகரிகம் தொட்டு இருந்துவரும் தமிழரின் மற விளையாட்டாகும்.பண்டைய காலத்தில் ஒரு தமிழ் பெண் வளர்க்கும் காளையை அடக்கி, தான் ஒரு மறவன் என்று ரு தமிழ் ஆண் அவளிடமும் ஊராரிடமும் மெய்ப்பித்தால் தான் அவன் அந்த பெண்ணை மணக்கமுடியும்.இதை ஏறுதழுவுதல் என்றனர்.பிறகு இப்போது ருந்து சுமார் ரு00[500] ஆண்டுகளுக்கு முன் தமிழகம் ,தெலுங்கு வந்தேறிகளான இராய மன்னர்களிடம் அடிமைப்பட்டது. இராய மன்னர்களுள் கிரிட்டிண தேவ இராயர் மிகவும் புகழ் பெற்றவர்.இந்த இராயர்கள் காலத்தில் ஏறுதழுதுதல் என்பது காளையின் கொம்பில் கட்டப்பட்டும் குறைந்த மதிப்புடைய சல்லிக்காசுகளுக்காக காளையை அடக்கும் ஒரு விளையாட்டாக மாற்ற பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள் இழிவு படுத்தப்பட்டனர்.இது நில உடைமை கொள்கையின் வெளிபாடாகவே இருந்தது.இவர்கள் காலத்தில் இருந்து ஏறுதழுவுதலானது சல்லிக்கட்டு என்று வழங்கப்படுகிறது

சரி இந்த விலங்கு நல ஆர்வலர்கள் என்பவர்கள் ,ஏன் ஏறுதழுவலை தடை செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்தனர் என்று வினவினால் ஏறுதழுவலில் காளை மாடுகள் வதைக்கபடுகின்றன என்று செப்பினர் .இந்த திடீர் விலங்கு நல ஆர்வலருக்கு பாரத்திய சனதா கட்சியை சேர்ந்த முன்னாள் நடுவனமைச்சர் 'மேனகா காந்தி' பரிந்து பேசி 'தமிழ் நாட்டில் பொங்கலின் போது நடத்தப்படும் 'ஏறுதழுவுதல் ' விலங்குகளுக்கும் ஊறு விளைவிப்பதாலும் மனிதர்களுக்கு இடர் ஏற்படுத்துவதாலும் அதை தடை செய்யப்பட வேண்டும் என்றார்,

ஏறுதழுவுதலில் காளைகள் அப்படி என்ன துன்புறுத்தப்படுகின்றன என்று கேட்டால் ஏறுதழுவுதலின் போது காளைகளுக்கு சாராயம் கொடுக்கின்றனர், அதன் கண்களில் மிளகாய் பொடியை தூவுகின்றனர்,மாடுகளின் வாலை போட்டு முறுக்குகின்றனர் என்று விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகினர்.இவர்களுடன் மனித நல ஆர்வலர்கள் என்பவர்களும் இணைந்து கொண்டு றுதழுவுதலின் போது மாடுபிடி மறவர்கள் மாடு முட்டி இறக்கிறார்கள், மாடுபிடி மறவர்களும் பொது மக்களும் புண் உறுகிறார்கள் என்றனர்.இவர்கள் கூறியது எல்லாம் சரி தான்.ஆங்காங்கே சில இடங்களில் சிலர் மாடுகளை துன்புறுத்துவதும் ஓரிரு மாடுபிடி மறவர்கள் இறப்பதும்,சில மறவர்கள் புண் உறுவதும் நிகழத்தான் செய்கிறது.அதற்காக தமிழரின் அடையாளமான ஏறுதழுவுதலை தடை செய்யவேண்டும் என்று கூறுவது ஒரு கேளிக்கூத்தான கூற்று.இதில் பலர் தமிழரின் எஞ்சிய பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதற்காக றுதழுலை தடை செய்யவேண்டும் என்று விலங்கு நலத்தையும் ,மனித நலத்தையும்,மனித உரிமையயும் முன்னிறுத்திப்பேசினர்.இவர்களுக்கு பகுத்தறிவாளர்கள் என்பவர்களும் முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் என்பவரும் பரிந்து பேசியது இன்னும் நகைப்பிற்குரிய ஒன்றாக இருந்தது.அதன் ஊடாக அவர்களின் போலிதனமான அல்லது குருட்டுத்தனமான முற்போக்குதனத்தையும் பகுத்தறிவையும் அறிய முடிந்தது.

பெரியார் கூறினார் என்பதற்காக ''க்கு பதில் 'அய்' யை எழுதுபவரை பற்றி எல்லாம் என்ன உரைப்பது.''யை ஒலிக்க ஆகும் நேர அளவு இரண்டு மாத்திரை ஆகும்.'அய்'யை ஒலிக்க ஆகும் நேர அளவானது ஒன்றரை மாத்திரை ஆகும்.ஆகையால் இவை இலக்கணப்படி ஒன்றல்ல.மேலும் ''யையும் 'அய்'யையும் ஒழுங்காக ஒலித்துப்பார்த்தால் இரண்டிற்கும் வெவ்வேறு ஒலிகள் இருப்பது புலப்படும்.ஆனால் இதை எல்லாம் பெரியாரின் அடியார்கள் அறிந்திருக்கவோ சிந்திக்கவோ காது கொடுத்துகேட்கவோ வாய்ப்பில்லை.இந்த பெரியாரின் அடியார்கள் பெரியாரிய ஆளர்களும் ஒன்றல்ல.


இப்போது பொங்கல் வருவதால் இந்த ஏறுதழுவுதலுக்கு எதிரான கூச்சல் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. றுதழுவுதலில் மனித உரிமை மீறப்படுகிறது என்று கூறப்படுவது தான் மற்ற குற்றச்சாட்டுகளை விட அடிப்படை அற்றதாகவும் கேளிக்கூத்தாகவும் இருக்கிறது.றுதழுவலுக்கு யாரும் எந்த மாடுபிடி மறவரையும் கையைப்பிடித்துக் இழுத்துக்கொண்டு போய் களத்தில் விடுவதில்லை.காளையர் தாமாகவே முன் வந்து தான் காளையை அடக்க வருகின்றனர்.இதில் மனித உரிமை மீறல் எங்கு இருக்கிறது.எது அவருக்கு நல்லது, எது அவருக்கு கெட்டது ,எது அவருக்கு களிப்பூட்டுவது என்பதை அந்த மாடுபிடி மறவர் தான் முடிவு பண்ணவேண்டும்.அதைவிட்டு விட்டு எது அவருக்கு நல்லது என்று முடிவு பண்ணும் உரிமையை மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்வது தான் மிகப்பெரும் மனித உரிமை மீறல்.ஆம் ஒரு ஆண் எந்த பெண்ணை மணக்க வேண்டும் என்பதையே இன்றைய தமிழ் குமூகத்தில் அவனின் பெற்றோர் தான் முடிவு செய்கின்றனர் எனும் போது இது எல்லாம் ஒன்றும் வியவில்லை.அசாமில் ஒரு பழங்குடியினப் பெண் நடுத்தெருவில் குடி[சாதி] வெறியர்களால் துகில் உரித்து ஓடவிடப்பட்டபோது,அங்கு பலங்குடியின இளைஞர்கள் மேட்டுக்குடி வெறியர்களால் கொல்லப்பட்ட போது,இந்தியா 'இலங்கைக்கு' போர் பயிற்சி,கப்பல்கள்,பீரங்கிகள்,ச்சு குண்டுகள் என்று கொடுத்து சுமார் நூறாயிரம் தமிழர்களைக் கொன்ற போது எல்லாம் இந்த மனித நல மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் எங்கு போய் இருந்தனர் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

விலங்குகளை வெட்டி இரைச்சியாக உண்ணுபதற்கு எதிராக பேசாத விலங்கு நல ஆர்வலர்கள் ஏறுதழுவுதலுக்கு எதிராக பேசுகின்றனர்.இரைச்சிக்காக மாட்டை வெட்டுவது சரி ஆனால் றுதழுவுதலுகாகவே திடமாக வளர்க்கும் மாட்டை ஒரு நாள் விளையாட்டுக்காக அடக்கினால் அது தவறு என்று கூறும் கூற்று எவ்வகையில் முறையாகும்.இந்த விலங்கு நல ஆர்வலர்கள் ஏன் மாடுகளை கொன்று அதன் தோலில் இருந்து பை,செருப்பு ,இடுப்புப்பட்டை ஆகியவற்றை உருவாக்கும் தோல் தொழிற்சாலைகளை மூட வேண்டும் என்று ஏன் வழக்கு தொடுக்கவில்லை.மாடுகளை கொல்லுவதை விடவா காளையை ஒரு காளையன் அடக்கும் செயல் கொடுமையானது ? காளைகளுக்காக கவலைப்படுபவர்கள் என்றாவது காளையரை கெடுக்கும் குடிபழக்கம் பற்றி கவலைப்பட்டதுண்டா.அரசு நடத்தும் இடாசுமாக்கு மது கடைகளுக்கு எதிராக பேசியதுண்டா,அந்த கடைகளை மூடச்சொல்லி வழக்கு தொடுத்ததுண்டா.மனிதனும் ஒரு விலங்கு தானே அவனைப் பற்றியும் கொஞ்சம் அக்கரைப்படலாமே


நேற்றைக்கு முந்தைய இரவு மக்கள் தொலைக்காட்சியில் 'றுதழுவுதலை தடை செய்யவேண்டுமா கூடாதா' என்ற கலந்துரையாடல் நிகழ்ந்தது.அதில் ஒரு வழக்குரைஞர் றுதழுவதின் போது காளைகளுக்கு சாராயம் கொடுக்கின்றனர், அதன் கண்களின் மிளகாய் பொடியை தூவுகின்றனர்,மாடுகளின் வாலை போட்டு முறுக்குகின்றனர் என்று அரைத்த மாவையே அரைத்தார்.றுதழுவுதல் என்ன தான் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் தமிலரின்[தமிழர் அல்ல] மற விளையாட்டாக இருந்தாலும் அது ஒரு விலங்குகளை கொடுமைபடுத்தும் இந்த முரட்டுதனமான விளையாட்டை தடைசெய்ய வேண்டுமென்றார்.சரி றுதழுவுதலுக்காகவே ஆண்டுமுழுவதும் நல்ல உணவளித்து வேறு எந்த வேலையும் இல்லாமல் திடமாக வளர்க்கப்படும் காளைகளை ஒரே ஒரு நாள் அடக்குவது என்பது மாடுகளை துன்புறுத்தும் செயல் என்கிறீரே இது என்ன விலங்குகளைகளை கொன்று அதன் இரைச்சியை உண்பதைவிடவா இது விலங்குகளுக்கு துன்பமானது.நீங்கள் விலங்குகளை கொன்று அதன் இரைச்சியை உண்ணுவதையும் ,தோல் பொருட்களை செய்வதற்காக கொல்லப்படுவதையும் எதிர்க்கவில்லை,அதை எல்லாம் ஏன் தடை செய்யச்சொல்லி வழக்கு போடவில்லை என்று கேட்டால் அந்த வினாவிற்கு விடையே அளிக்காமல் கேவலமாக பல்லைக்காட்டிவிட்டு ,தொன்று தொட்ட தமில் [தமிழ் அல்ல] பண்பாடு என்ற பெயரால் இது போன்ற முரட்டுத்தனமான விளையாட்டுகளை அனுமதிக்கமுடியாது என்றார்.

அது சரி.எப்போதும் இந்து, இந்து பண்பாடு ,இந்து சமயம் , பரந்த இந்தியா வேண்டும் என்று பிதற்றும் பாரத்திய சனதா கட்சியை சேர்ந்த தலையாய தலைவரான மேனகா காந்தி றுதழுவலை தடை செய்யவேண்டும் என்று கூறியது தான் மிகவும் சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.எப்போதும் இந்துகளின்பண்பாட்டை காப்பேன் என்று கூறும் இவர்கள் ,ஏன் றுதழுவலை தடைசெய்யவேண்டும் என்று கூற வேண்டும்? அப்படி என்றால் தமிழன் இந்து இல்லை என்பது தானே பொருள். தமிழ் பண்பாடுஎன்பது இந்து சமயம் என்பதும் வெவ்வேறு என்பது தானே பொருள்.தமிழரின் பண்டைய சமயங்கள் இயற்கை வழி பாடு அதன் பின் சைவமும்,வைணவமும்,சமணமும்,பௌத்தமும் ஆகும். இந்து சமயம் என்பது ஆரியரான பார்ப்பனர்களால் 19 ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட போலி சமயம்.சைவம் ,வைணவம் ,ஆரியரின் மறை சமயம்[வேத சமயம்]குலக்கடவுள் வழிபாடு மற்றும் இன்னும் பல சமயங்களைசேர்ந்த்து கூட்டாஞ்சோறு போல் ஆக்கி அதில் மறை சமயத்தையும் ,வட இந்திய பகவத்து கீதையையும் ,வடமொழியையும் முன்னிறுத்தி உருவாக்கிய கூட்டுசமயம் தான் இந்து சமயம்/சமயங்கள்.மேலும் இதில் தென் இந்திய சைவத்திற்கும் வைணவத்திற்கும் தேவாரம் , திருவாசம்,நாலாயிர, திவ்விய பிரபந்தம்திருப்பவை ,திருவாய்மொழி போன்ற தமிழ் நூலகளுக்கு எல்லாம்இடமில்லை.அது மட்டும் அல்ல. பண்பாடு என்பது சமயத்தின் கூரு அல்ல ,சமயம் தான் பண்பாட்டின் கூரு.ஆகையால் பொங்கலையோ ,றுதழுவதலையோ சைவ பண்பாடு என்றோ வைணவ பண்பாடு என்றோ கூற இயலாது.ஆகவே பொங்கலும் ஏறுதழுவுதலும் தமிழ் பண்பாட்டை சார்ந்தவை.

இந்தியா என்பது ஆரியர்களாகிய பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக உருவாக்கவட்ட கூட்டமைப்பு.இந்தியா என்பது பல தேசிய இனங்களின்[ethnicities] நிலப்பரப்புகளை வளைத்துபோட்டு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு [இந்தியாவின் அரசியல் சட்டத்தில் இந்தியாவில் உள்ள தேசிய இனங்களுக்கு ஏற்பிசைவு [அங்கிகாரம்' ]இல்லை ,தேசிய இனங்களுக்கான தன்முடிவு[சுய நிர்ணய] உரிமை வழங்கப்படவில்லை .இந்திய நாட்டு இயம் இருக்கும் வரை தான் அவர்கள் இந்த கூட்டமைப்பை கட்டிக்காக இயலும்.ஆகவே இவர்கள் ,மக்கள் எப்போதுமே தங்களை இந்தியன் என்றும் இந்து என்றும் தான் அடையாளபடுத்திக்கொள்ள வேண்டும் என்பர்.அதற்கு தான் இவர்கள் அவ்வப்போது இந்து முசுலிம் சிக்கலை இவர்களே தூண்டிவிட்டு , பின் மக்கள் சண்டைப்போடும் இடத்திற்கு போய் நாம் இந்தியர் ,நாம் இந்தியர், இந்தியா நம் நாடு ,நாம் இந்தியராக இருந்தால் தான் நலமாக வாழமுடியும் என்று அங்கு போய் இந்திய நாட்டு இயத்தை[தேசியத்தை] தூக்கிபிடிப்பதே இவர்களின் வேலை.மக்கள் அமைதியாக சமய சண்டைகள் இல்லாமல் தங்கள் மொழி ,பண்பாடு என்று அமைதியாக இருந்தால் தங்கள் மொழி ,பண்பாடு ஆகியவற்றை பேணுதல் ,தங்கள் மொழி உரிமைகள் தேசிய இனங்களின் தன்முடிவு [தன்நிர்ணய உரிமை] உரிமை என்று சிந்திக்க துவங்கிவிடுவர் .அதன் பின் காலப்போக்கில் இந்திய நாட்டு இயம் சிதைந்துவிடும் .ஆகவே இந்த இந்திய தேசியஇயத்திற்கும் இந்த செயற்கையான கூட்டு சமயமான இந்து சமயத்திற்கு இடையூறாக இருக்கும் தேசிய இனங்களின் அடையாளமான மொழி,பண்பாடு,பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை மேல்ல மெல்ல மறைமுகமாக அழிப்பதயே இந்த இந்திய நாட்டு இய கூட்டம் தனது வேலைத்திட்டமாக வைத்து இருக்கிறது.ஆகையால் தான் இவர்களின் இந்தியாவிற்கும் இந்து என்னும் போலி கூட்டு சமயத்திற்கும் எதிரான பொங்கல்,ஏறுதழுவுதல் போன்ற தேசிய இன அடையாளங்களையும் பண்பாட்டையும் அழிக்க நினைக்கின்றனர்.தமிழர்களின் உழவர் திருநாளான சமய சார்பற்ற பொங்கலை தான் இந்தியா முழுவது சங்கராந்தி என்று திரித்து இந்தியாவின் பல பகுதிகளிலும் கொண்டாடுகின்றனர் .இந்த இந்திய நாட்டு இய ஆளர்களுக்கு தமிழர் பண்பாட்டின் கூரான பொங்கலின் சமய சார்பற்ற தன்மையை மாற்றி அதை சங்கராந்தி என்னும் இந்து பண்டிகையாக நிறுவவேண்டும். நிறுவனங்களில் சில பெரும் வேலைகள் முடிந்த பின் விருந்து வைத்து எப்படி களிப்புறுகிறார்களோ அது போல் அறுவடைக்கு பின் ஒரு விருந்து வைத்து களிப்புறுவது தான் பொங்கல் இதில் எந்த சமயத்திற்கும் தொடர்பில்லை.மேலும் இந்த இந்திய நாடு இய ஆளர்களால் தான் தமிழ் ஊடகமான தமிழ் தொலைக்காட்சிகள்,நாளேடுகள்,கிழமை இதழ்கள் [வார இதழ்கள்],திங்கள் இதழ்கள் [மாத இதழ்கள்] ஆகியவற்றில் தமிழ் இல்லை.இதன் தாக்கத்தால் கடைகளின் பெயர் பலகைகள்,வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் என்று எங்கும் எதிலும் தமிழில்லை.இந்த கும்பலுக்கு 'றுதழுவுதலை தடை செய்யவேண்டும் ' என்று செப்பி , குருட்டுதனமான மற்றும் போலி முற்போக்கு ஆளர்களும் துணையாக இருப்பது எரிச்சலைத் தான் ஊட்டுகிறது

றுதழுவுதலில் போது காளைகளுக்கு சாராயம் கொடுக்கின்றனர், அதன் கண்களின் மிளகாய் பொடியை தூவுகின்றனர்,மாடுகளின் வாலை போட்டு முறுக்குகின்றனர் என்றால் அதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். மாடு பிடி மறவர்களுக்கு உயிர் இழப்பு ஏற்படாமல் இருக்க முதலுதவி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போட்டிஅமைப்பாளர்கள் செய்து இருக்கிறார்களா ,நல்ல தொகையை பரிசாக மாடுபிடி மறவர்களுக்கு தருகிறார்களா என்று அரசு கண்கானிக்கட்டும். தமிழக அரசிற்கு உண்மையிலேயே தம் தமிழ் பண்பாடு மற்றும் மொழியின் மீது அக்கரை இருந்தால் அரசே இந்த விளையாட்டிற்கு தனிவாரியம் அமைத்து இதை அரசே ஒரு விளையாட்டு திடல் அமைத்து நடத்தலாம்.தொலைக்காட்சியில் ஒலிபரப்பலாம்,மாடு பிடி மறவர்களுக்கு நல்ல பரிசு தொகையை தரலாம்,அவர்களுக்கு காப்பிட்டை தரலாம்,பிறகு இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் பரப்பலாம்.தமிழ் பண்பாட்டையும் பரப்பியது போலவும் இருக்கும் அரசிற்கு வருவாயும் வந்தது போலவும் இருக்கும்.ஏற்கெனவே அங்கிலேயர் தங்கள் ஆட்சிகாலத்தில் களரியை தடை செய்ததால் போர்கலையும் மருத்துவ கலையுமான அது தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது .இப்போது களரியும் வன்மக்கலையும் கேரளத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ளது,௫௦௦௦ [5000] ஆண்டுகளுக்கு மேல் பழமையான தமிழரின் போர்கலையும் உலகின் மிகவும் கடுமானதும் வன்மையானதுமான களரியை தங்களின் கலை என்று மலையாளிகள் உலகம் முழுவதும் நிறுவுகின்றனர். இந்த களரியில் இருந்து தான் கராத்தே,குங்கு பூ எல்லாம் தோன்றியது.தமிழ் நாட்டில் இருந்து போதி தர்மர் இதை சீனத்திற்கு கொண்டு பரப்பினார் . அங்கு காலப்போக்கில் அதில் இருந்து கராத்தேவும் ,குங்கு பூவும் தோன்றியது.எனினும் களரி தான் அவ்விரண்டையும் விட கடினமானதும் சிறந்ததும் ஆகும்.தமிழ் நாட்டில் சிலம்பக்கலை பெயருக்கு தான் இருக்கிறது,சிலம்பம் ,களரியை விட பழமையான கலை.சிலம்பம் ஒரு கற்கால கலையாக இருக்கக்கூடும் .ஏனெனின் மனிதன் கற்களை பயன் படுத்தும் முன் தடிகளை தான் விலங்குகளை வேட்டையாடவும் தன்னை தற்காத்துக் கொள்ளவும் பயன்படுத்தி இருப்பான்.கராத்தே கற்க விரும்பும் நம் மக்கள் சிலம்பத்தை தீண்டிக்கூட பார்ப்பதில்லை.தமிழ் நாட்டு அரசுமிந்த கலைகளை மீட்டெடுக்கவும் பரப்பவும் எந்த நல்ல நடவடிக்கையையும் எடுக்கவில்லை.இனியாவது எடுக்குமா?தமிழ் ஆர்வலர்களும் உணர்வாலர்களும் எடுக்கவைப்பரா?