வெள்ளி, 17 டிசம்பர், 2010

தமிழீழமும் கேள்விகளும் வதந்திகளும் பொய் பரப்புரைகளும் மெய்களைத் தேடலும்








தமிழீழம் குறித்து ஓர்குட்டு குமூகங்களில் வரலாறு தெரியாதவர்களும்,தமிழ் இன இரண்டகர்களும்,எதிரிகளும் பரப்பும் வதந்திகளையும் பொய் கண்டு நான் பல நேரங்களில் சினந்தெழுந்து அவர்களுக்கு உரிய சான்றுகளுடன் தக்க பதிலடிக்கொடுத்து வந்து இருக்கிறேன்.ஆனால் இந்த பதிலுரைகளை அவர்கள் ஆங்காங்கே எழுதும் பொய்யான செய்திகளுக்கு பதில் தருவதாக இல்லாமல் இவர் வழக்கமாக கிளப்பும் வதந்திகளையும்,இவர்கள் செய்யும் பொய் பரப்புரைகளையும் ஒன்றாக தொகுத்து அவற்றிக்கு ஒரே இடத்தில் பதில்களை சான்றுகளுடன் பதியலாம் என்ற எண்ணம் எனக்கு இந்த கீழ் கண்ட பதிவை ஒரு ஓர்குட்டு குழுமத்தில் பார்த்தபின் தான் வந்தது



" அண்ணா என்னிடம் அடிக்கடி என்னிடம் கூறியது"அவர் மக்களை நேசிக்கவில்லை மண்ணைத்தான் நேசித்தார்"என்று.அவர் அப்படி மக்களை நேசித்திருந்தால் இவ்வளவு மக்கள் இறந்திருக்க மாட்டார்கள்.இட்லர் கூட தன நாட்டு மக்களை கொன்று குவிக்கவில்லை அடுத்த நாட்டு மக்களைத்தான் கொன்றார் என்றார். அவர்களுக்கு மத்த நான்கு இயக்கங்களும் வளர்வது பிடிக்காமல் அவற்றை அழிக்க நினைத்துள்ளார்.இந்த பிரச்சினை ஆரம்பித்ததே ஒரு பெண்ணால்தான்.பிரபாகரன் ஒரு பெண்ணை காதலித்துள்ளார் ஆனால் அந்த பெண்ணோ பிலோட்டு இயக்கத்தின் தலைவர்
திரு.உமா மகேசுவரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இதனால் கோபமுற்ற பிரபாகரன் அந்த இயக்கதி தலைவர் திரு.உமா மகேசுவரனை கொன்றுவிட்டு அந்த இயக்கத்தையே இல்லாமல் செய்துவிட்டார்.
""


சரி அடுத்து வழக்கமாக குறித்து இது போல் எழுப்படும் வதந்திகள், கேள்விகள்,பொய் பரப்புரைகள் ஆகியவற்றை எல்லாம் வரிசைப்படுத்தி அதற்கு விடைகாணலாம்

க[1].குற்றச்சாட்டு:பிரபாகரன் ஒரு பெண்ணை காதலித்துள்ளார் ஆனால் அந்த பெண்ணோ பிலோட்டு இயக்கத்தின் தலைவர் திரு.உமாமகேசுவரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்,இதனால் கோபமுற்ற பிரபாகரன் அந்த இயக்கதி தலைவர் திரு.உமாமகேசுவரனை கொன்றுவிட்டு அந்த இயக்கத்தையே இல்லாமல் செய்துவிட்டார்

பதில்: பிரபாகரனும் ,உமாமகேசுவரனும் விடுதலை புலிகள் இயக்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் .உமாமேகசுவரன் உருமிலா தேவி என்கிற பெண்ணை காதலித்தார்.ஆனால் அது அதோடு நில்லாமல் திருமணத்திற்கு முன்பான உடலுறவில் போய் முடிந்தது.இது புலிகளின் தலைமை குழுவிற்கு தெரியவர உமாமகேசுவரன் புலிகள் இயக்கத்தைவிட்டு வெளியேறினார்.ஏன் என்றால் புலிகளின் இயக்க கோட்பாடுகளின் படி திருமண உறவோ,காதலுறவோ கூடாது.ஆனால் உமா மகேசுவருனும் உருமிலா தேவியும் திருமணத்திற்கு முன்பே உடல் உறவு வைத்துக்கொண்டனர்.திருமணம் செய்துக்கொள்ள கூடாது என்கிற சட்டம் பிற்காலத்தில் பிரபாகரனும் மதிவதனியும் காதலுற்றப் போது புலிகளின் தலைமைக்குழுவால் தளர்த்தப்பட்டது [க]

தமிழீழ விடுதலை புலிகள் இயகத்ததில் இருந்து உமா மகேசுவரன் வெளியேற்றப்பட்ட பின் அவர் 'தமிழீழ மக்கள்
விடுதலைக் கழகம்' [PLOTE = People's Liberation Organisation of Tamil Eelam]என்ற இயக்கத்தை தொடங்கினார்.இது தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுக்கு எதிரானது.ஏன் என்றால் புலிகளின் இயக்க சட்டங்களின் படி அந்த இயக்கத்தில் இருந்து வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்ட எவரும் வேறு ஒரு போராட்ட இயக்கத்தில் சேரவோ ஒரு போராட்ட இயக்கத்தையும் துவங்கக்கூடாது.


புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமையால் உமாமகேசுவரன் புலிகளுக்கு எதிராக செயல்படத்தொடங்கினார்.ஆனால் இவரைக்கொன்றது புலிகள் அல்ல. 1988 ஆம் ஆண்டு ஏப்பிரலில் வெளி வந்த 'தீ சண்டே இரைம்சு'[The Sunday Times] ஏடு திரு.உமாமகேசுவரன் இலங்கையில் குடியரசர் செய்வருத்தனாவை சந்தித்து இரண்டு மணி நேரம் பல்வேறு விடயங்களைப் பற்றி பேசியதாக கூறுகிறது. பிறகு உமாமகேசுவரின் 'தமிழீழ மக்கள் விடுதலைக் கழக'இயகத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் இந்த செய்தியை உறுதிப்படுத்தின.இந்த சந்திப்பிற்கு பின் உமாமகேசுவரனுக்கு செயவருத்தானிடன் ஒப்பிசைவு[அங்கீகாரம்] கிடைத்ததாகவும் கூறினர்



இந்த சந்திப்பிற்கு பின் உமாமகேசுவரனாலும்,அவரது இயக்கத்தினராலும் கொழும்பில் தங்குதடையின்று செயல்பட்டது.அவரின் இயக்கத்திற்கு சிங்கள தரைப்படையும் உதவியது[உ]. உமாமகேசுவரன் தோற்றுவித்த 'தமிழீழ மக்கள் விடுதலை இயக்கமானதுதமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் கடும் போர் நடந்துக்கொண்டு இருந்த வேளையில் ' ௧௯௮௮ [1988] ஆம் ஆண்டு நவம்பர் திங்களில் மலைத்தீவு[Maldives] தொழில் முதலாளியான் அப்துல்லா இலுத்துபீ[Abdullah Luthufi]இடம் இருந்து க0[10] இலட்சம் அமெரிக்க இடாலர்களைப்பெற்று கொண்டு மலைத்தீவு குடியரசர் மௌமூன் அப்துல் கயோம் [Maumoon Abdul Gayoom] இன் ஆட்சியை படை நடவடிக்கையூடாக கவிழ்த்து அந்த தொழில் முதலாளி ஆட்சியைபிடிக்க கூலிப்படையாக செயல்பட்டனர்.இதற்கு 'தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம்' க00[100] இலட்சம் அமெரிக்க இடாலர்களை பெற்றதாகவும் சிலர் கூறிகின்றனர்[௩].ஆனால் இந்த நடவடிக்கை இந்தியாவால் நடுத்து நிறுத்தப்பட்டது,இராசிவு காந்தி ௧௬00 [1600]வான்படை வீரர்களை அனுப்பு மலைத்தீவை இந்திய படைகளில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து மலைத்தீவு குடியரசரின் ஆட்சியைக் காப்பாற்றினார்.உமாமகேசுவரன் இந்திய உளவு நிறுவனமான றாவிடம் [RAW] இருந்தும் பணம் பெற்று இந்த நடவடிக்கையை எடுத்தாகவும் கருத்துகள் நிலவுகின்றன.உமா மகேசுவரனின் இயக்கம் இந்த நடவடிக்கையில் ஈடுபடும்போது இந்தியா தலை இட்டு அதை தடுத்து நிறுத்தி தெற்காசியாவில் தனது வலிமையைக் காட்ட றா[RAW] உமா சங்கரனுக்கு இதற்கு பணம் தந்ததாகவும்.அவர் றாவின் ஊதிய பட்டியல் பல காலம் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது[௪]



பிறகு ௧௯௮௯[1989] ஆம் ஆண்டு யூலை திங்கள் ௧௬[௧௬] ஆம் நாள் உமாமகேசுவரன் கொழும்பில் கொல்லப்பட்டார்.இதற்கு 'ஈழ தேசிய சனநாய விடுதலை முன்னணி ' [ENDLF=Eelam Nation Democratic Liberation Front] என்கிற இயக்கம் பொறுப்பேற்றுக்கொண்டது.௧௯௯0[1990]வரை தமிழீழத்தில் புலிகளுக்கும் இந்திய படைகளுக்கும் இடையே கடும்போர் நடந்துக்கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. 'ஈழ தேசிய சனநாய விடுதலை முன்னணி ' [ENDLF=Eelam Nation Democratic Liberation Front] இயக்கத்தை தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம்[ PLOTE =People's Liberation Organisation of Tamil Eelam] இயக்கத்தில் இருந்து வெளியேறிய பரந்தன் இராசா என்கிற குணபிரகாசம் குணசேகரம் என்பவரால் இந்தியாவின் உளவு நிறுவனமாக 'றா' வின்[R.A.W=Research and Analysis Wing] உதவியுடன் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கம்[ TELO =Tamil Eelam Liberation Organisation],ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி[EPRLF =Eelam People's Revolutionary Liberation Front] ஆகிய இயங்களில் இருந்து வெளியேறிய உறுப்பினர்களைக்கொண்டு உருவாக்கப்பட்டது.இதனால் உமா மகேசுவரன் கொலையில் இந்திய உளவு நிறுவனமாக 'றாவிற்கும்' [R.A.W] தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.மலைதீவில் உமாமகேசுவரன் நடத்திய கூலிப்படை நடவடிக்கையில் தொடர்புடைய சிங்கள அரசு தலைகளைப் பற்றிய தகவல்கள் உமா மகேசுவரனுக்கு தெரிந்து இருந்தமையால் அவர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது[௫] ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி [EPRLF] அமைப்பில் இருந்து பிரிந்து வந்து உறுப்பினர்களுக்கு தலைமை வகித்து அவர்களை தேசிய சனநாய விடுதலை முன்னணி ' [ENDLF=Eelam Nation Democratic Liberation Front] அமைப்பில் இணைத்தவர் திரு.இடக்லசு தேவானந்தா [Douglas Devananda] . இந்தியாவில் கொலை,கொலை முயற்சி, கலவரம் உண்டாக்கல்,ஆட்கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் பெயரில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட இப்போது இவர் ஈழ மக்கள் சனனாயக கட்சி[EPDP =Eleam People's Democratic Party] என்ற அமைப்பை நடத்துகிறார்.இவர் கட்சியும் இன அழிப்பு போர் குற்றவாளி இலங்கை குடியரசர் மகிந்தா இரசாபக்குசேவுடன் கூட்டணி வைத்து இருக்கிறார்.தமிழீழத்தில் இவர் சிங்கள அரசு மற்றும் அதன் தரைப்படை உதவியினால் ஒரு ஒட்டுக்குழுவாக செயல்பட்டு ஆட்கடத்தல்,பணம்பறிப்பும்,கொலைகள்,கற்பழிப்பு,விலை மாதர் தொழிலில் பெண்களை கட்டாயபடுத்தி ஈடுபடுத்தல் ஆகிய குற்றங்களை செய்து [௬]வருகிறார்





க - விடுதலைப்புலிகள் -முருதன் ,கிழக்குப் பதிப்பகம்



உ -http://www.atimes.com/ind-pak/DD20Df03.html



௩ -http://query.nytimes.com/gst/fullpage.html?res=940DE5D6163EF93BA25751C1A96E948260



http://www.maldivestoday.com/2010/11/03/november-3rd-coup-attempt-of-maldives/


- இணைப்பை தேடுகிறேன்

௫ -http://www.atimes.com/ind-pak/DD20Df03.html



- http://www.guardian.co.uk/world/us-embassy-cables-documents/108763



தமிழீழம் குறித்த கேள்விகள்,வதந்திகள்,பொய் பரப்புரைகளுக்கு தொடர்ந்து பதில் வெளிவரும்